On this day in June 23, 1940: Hitler takes a tour of Paris

 

 

 

 

On this day in 1940, Adolf Hitler surveys notable sites in the French capital, now German-occupied territory.

In his first and only visit to Paris, Hitler made Napoleon’s tomb among the sites to see. “That was the greatest and finest moment of my life,” he said upon leaving. Comparisons between the Fuhrer and Napoleon have been made many times: They were both foreigners to the countries they ruled (Napoleon was Italian, Hitler was Austrian); both planned invasions of Russia while preparing invasions of England; both captured the Russian city of Vilna on June 24; both had photographic memories; both were under 5 feet 9 inches tall, among other coincidences.

As a tribute to the French emperor, Hitler ordered that the remains of Napoleon’s son be moved from Vienna to lie beside his father.

But Hitler being Hitler, he came to do more than gawk at the tourist attractions. He ordered the destruction of two World War I monuments: one to General Charles Mangin, a French war hero, and one to Edith Cavell, a British nurse who was executed by a German firing squad for helping Allied soldiers escape German-occupied Brussels. The last thing Hitler wanted were such visible reminders of past German defeat.

Hitler would gush about Paris for months afterward. He was so impressed, he ordered architect and friend Albert Speer to revive plans for a massive construction program of new public buildings in Berlin, an attempt to destroy Paris, not with bombs, but with superior architecture. “Wasn’t Paris beautiful?” Hitler asked Speer. “But Berlin must be far more beautiful. [W]hen we are finished in Berlin, Paris will only be a shadow.”

பேசாலையில் சிக்கிய தமிழக கடத்தல் நபர் தொடர்பாக புலனாய்வுத்துறை விசாரணை

இலங்கையில் பேசாலையில் 790 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சர்வதேச மதிப்பு (ரூ.75 இலட்சம்)சிக்கிய, தமிழக கடத்தல் புள்ளி அப்துல் ரகுமான் குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். தலைமன்னார் அருகே பேசாலை நடுக்குடா பகுதியில் ஜூன் 17 இல், பேசாலை சற்குணராஜா உதயகுமார் மற்றும் இவரது நண்பரான ராமநாதபுரம்  நூர்தீன் மகன் அப்துல்ரகுமான் ஆகியோர் அந்நாட்டு பொலிஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 790 கிராம் எடையுள்ள ஹெரோயின் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.

“ராமேஸ்வரத்திலிருந்து படகில் போதைப் பொருளை கடத்தி வந்ததாக’ தெரிவித்த அப்துல் ரகுமான்,  சற்குணராஜா உதயகுமார் ஆகிய இருவரையும் தொடர் விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் (ஜூன் 22) மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்துகின்றனர்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவடத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான், ஏற்கெனவே வாலிநோக்கம் பகுதியில் பல கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பொலிஸாரிடம் சிக்காமல் இருப்பதாக பல பெயர்களில் வலம் வந்தது, போலி முகவரியை தெரிவிப்பது இவரது வழக்கம் என தெரிய வந்துள்ளது. இவர் இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து யாருடைய படகில் சென்றார். இவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து இந்திய புலனாய்வுத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றன.

Thanks to – Voice of Mannar

பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை

Amezing calendar

நாம் வாழும் இப்பூமி திடீரென 2012 டிசம்பர் 21ல் முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய “மாயன்” சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மாயன், இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம். அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.

ஆதி எகிப்திய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. புவியின் துருவப்பகுதிகள் இடம்மாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டும், வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறைய 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம்புகின்ற இன்னோர் குழுவினர். இவற்றை எல்லாம் மறுக்கும் இன் னொரு பகுதியினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம். சில வேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது “மாயன் நாட்காட்டி”. மாயன் நாட்காட்டியின் எதிர்பார்ப்பின் படி 2012 டிசம்பர் 21 (21-12-2011 GMT 11:11 P:M) எமது சூரியன் அதன் விண்மீன் மண்டலத்தின் (Galaxy) நேரடி பார்வையில் வருகின்றது. இந்த நேரத்தில் விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சூப்பர்நோவா கருங்குழி (Supernova black hole) மற்றும் எமது சூரியன், பூமி என்பன ஒரே நேர்கோட்டில் நேராக சந்திக்கவுள்ளன.

இந்தவேளையில் சூப்பர்நோவா கருங்குளியில் அதாவது எமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் இருந்து வரும் காந்த அலைகளால் எமது பூமியும், சூரியனும் வெகுவாக பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியனின் அதிகமான மாற்றங்கள் (இதனை மாயன்- சூரிய நிலநடுக்கம் (sun earth quack) என்கிறது) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனப்படுகின்றது. இச்செயற்பாடு ஒவ்வொரு 26,000 வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறுவது என்கிறது மாயன் நாட்காட்டி. இவ் விடையத்தின் உண்மைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் குழப்பமான பதில்கள் தோன்றி யிருக்கின்றன.

மாயன் சமூகம்

இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மாயன் சமூகம் மூவாயிரம் வருடங்களாக உலகின் பிரசித்திபெற்ற ஆதி சமூகமாகும். மாயன் கணிப்புகளில் நடந்தேறியவை அதிகம். மாயன் சமூகம் மத்திய அமெரிக்காவின் மெக்சிக்கோவில் தென் மாகாணங்கள் மற்றும் வடக்கு, மத்திய அமெரிக்கா வின் இன்றைய குவாதமாலா, எல்சல்வாடோர், கொண்டூரஸ் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கி கி.மு. 2000 தொடக்கம் கி.பி. 250 வரையான புராதன காலத்தின் ஆரம்பகாலங்களில் வளர்ச்சியடைந்த ஒரு சமூகமாகும். கி.பி. 250 தொடக்கம் கி.பி. 900 வரையிலான புராதன காலங்களில் மாயன் நகரங்கள் அதிகளவான வளர்ச்சி கண்டிருந்தன. மாயன் சமூகம் கணிதவியல் மற்றும் வானியல் என்பனவற்றில் வளர்ச்சியடைந்த எழுத்தறிவு கொண்ட ஓர் சமூகமாக இன்று இனங்காணப்பட்டிருக்கின்றது. அவர்கள் நட்சத்திரங்களும் கோள்களும் பயணிக்கும் பாதைகள், அவற்றின் பயண வேகம், பல்வேறு காலங்களில் வான்வெளியில் அவைகளின் சஞ்சாரம் என்று தாங்கள் கண்டறிந்த பலப்பல உண்மைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பயன்படட்டும் என்று எழுதி வைத்தனர். அரசர்கள், செல்வந்தர்கள் ஆதரவால் கோள்களின் தினசரி நடமாட்டங்களை – சூரியனை அல்லது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டன. நாளடைவில் இந்தக் குறிப்புகள் மெருகூட்டப் பட்டு நாட்காட்டிகள் நடைமுறைக்கு வந்தன.

நாட்காட்டிகள் பற்றிய சில சுவையான தகவல்கள் இதோ:

மாயன் நாட்காட்டி (Mayan Calendar)

மிகவும் சிக்கலான, ஆனால் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட நாட்காட்டி இது. மாயன் நாட்காட்டி 3 வகையான, ஒன்றுக்கொன்று இணையான காலக் கணிப்பு முறையை (parallel dating system) பயன்படுத்துகிறது. முதலாவது லாங் கவுண்ட் (Long Count), இரண்டாவது சோல்கின் (Tzolkin) எனப்படும் டிவைன் நாட்காட்டி (Divine Calendar), மூன்றாவது ஹாப் (Haab) என்று கூறப்படும் சிவில் நாட்காட்டி  (Civil Calendar). இவைகளுள் ஹாப் நாட்காட்டி மட்டுமே முழு வருடத்திற்குமான  விவரத்தைக் காட்டும். பலரும் நம்புவதுபோல 2012 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்பதை மாயன் நாட்காட்டி முன்கூட்டியே கணித்துக் கூறவில்லை.

ஆஸ்டேக் நாட்காட்டி (Aztec Calendar):

amezing-calendar

amezing-calendar

இந்த நாட்காட்டியும் மாயன் நாட்காட்டியும் அடிப்படையில் ஒன்றுதான். மாயன் நாட்காட்டியில் சிறிது மாற்றம் செய்து உருவாக்கப்பட்டது இது. இதில் இரண்டு வகையான வருடக் கணக்குகள்  உண்டு. முதலாவது 365 நாட்களைக் கொண்ட உழவுத் (Agricultural Calendar) தொழிலை – அதாவது சூரியனை அடிப்படையாகக் கொண்ட  நாட்காட்டி. இன்னொன்று 260 நாட்கணக்கு கொண்ட புனித (Sacred Calendar) நாட்காட்டி. இவை இரண்டும் சேர்ந்து அமைந்ததுதான் 52 வருடங்களுடன் கூடிய நூற்றாண்டு (Century).

இந்த நாட்காட்டி இன்றும் மெக்ஸிகோ நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் (Museo Nacional de Antropologia) பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் வியக்கத்தக்க விஷயம் இந்த நாட்காட்டியில் என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் வராத நாட்கள் என்று சில நாட்களை வாழ்க்கையை சுதந்திரமாக ரசிக்க, கொண்டாட என்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். மாயன் நாட்காட்டியில் சூரிய வருடத்தின் கடைசி 5 நாட்கள் அடுத்த வருடத்திற்கான மாற்றத்திற்கும் அதற்கான தயார்படுத்துதலுக்காகவும் என்று கணக்கிடப்பட்டு “பெயரில்லாத நாட்கள்” எனப்பட்டன.

எகிப்திய நாட்காட்டி: (Egyptian Calender)

egyptian-calendar

egyptian-calendar

இந்த நாட்காட்டியின் சரித்திரம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. ஒரு வருடத்திற்கு 365 நாட்கள்; 12 மாதங்கள்; ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்; ஒவ்வொரு வருடக் கடைசியிலும்  5 அதிக நாட்கள்! ஒவ்வொரு மாதமும் 10 நாட்களைக் கொண்ட 3 வாரங்கள். வெள்ளம் வருவதை முன்கூட்டியே இவர்களால் கணித்துக் கூறமுடிந்தது ஒரு ஆச்சரியமான விஷயம். கிரேக்கர்களையோ, மெசபடோமியர்களையோ போல் அல்லாமல் தங்களுக்கென்று ஒரு ராசிமண்டலத்தை உருவாக்கி இருந்தனர். பாப்பிராஸ் செடியிலிருந்து தயார் செய்யப்பட்ட காகிதத்தில் இவற்றையெல்லாம் மிக அழகான முறையில் (Pictoglyphs) விளக்கக் காட்சிகளாக செய்து வைத்திருந்தனர்.

எகிப்திய மாதங்கள்

egyptian-months

egyptian-months

2012 புவியின் இறுதி எவ்வாறு தீர்மானிக்கப்பட போகின்றது என்பது குறித்து பல கருத்துகள் தோன்றியிருந்தாலும், அதிகமாக பேசப்படுகின்றதும் அதிகளவில் சாத்தியமானதும் என பலராலும் விவாதிக்கப்படுகின்ற ஒரு விடையம் குறித்து இங்கு குறிப்பிடலாம். 2012 இன் பின்னர் எமது விண்மீன் மண்டலத்தின் நேர்கோட்டிற்கு வரும் பூமி அதை தாண்டியதும் பூமியினுடைய காந்தப்புலங்கள் திசைமாறும் எனப்படுகின்றது. இதனால் துருவங்கள் இடமாறுவதுடன், அதுவே புவியின் பாரிய அழிவுக்கு வழிகோலும் எனப்படுகின் றது. பாரிய எரிமலை வெடிப்புகள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் என்பனவற்றுடன் நவீன மனித சமூகத்தின் அழிவு ஒன்று அரங்கேறவுள்ளது என்கிறது மாயன். இப்படியான துருவங்களின் இடமாற்றத்தினால் நிகழும் இச்செயற்பாடுகள் புவியில் உள்ளவர்களின் கண்ணுக்கு ஏறக்குறைய 40 வருடங்கள் சூரியனின் பிரசன்னத்தை மறைக்கும் அளவிற்கு புவியை புகைமண்டலங்கள் மூடிக்கொள்ளும் எனப்படுகின்றது.

“துருவங்களின் இடப்பெயர்ச்சி” என்ற விடையம் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். எனினும், அது 2012ல் நிகழுமா என்பது குறித்து விஞ்ஞானிகளால் எதுவும் கூறப்படவில்லை. விண்மீன் மண்டலத்தின் ஒருநாள் என்பது புவியின் 25,625 வருடங்களைக் கொண்டது. இதனை மாயன் நாட்காட்டி 5,125 வருடங்களைக் கொண்ட ஐந்து காலகட்டங்களாக பிரிக்கின்றது. அதன்படி எமது பூமி இப்போது ஐந்தாவது காலகட்டத்தின் இறுதியில் இருக்கின்றது. என்கின்றது 2012 டிசம்பர் 21 இக்கட்டத்தின் முடிவுடன் அடுத்த புதிய யுகத்தினுள் மனித சமூகம் நுழையவிருக்கின்றது என்கிறது மாயன். எமது சூரியன் அடிக்கடி அதன் மத்திய விண்மீன் மண்டலத்தினால் புத்துயிர் பெறச் செய்யப்படுகின்றது என்பதனை மாயன் சமூகம் ஒவ்வொரு 5, 125 வருடங்களுக்கும் ஒருமுறை இச்செயற்பாடு நடைபெறுவதாக தெரிந்திருந்தார்கள்.

2012ல் நடைபெறவிருக்கின்ற அவ்வாறான ஒரு செற்பாட்டினால் எமது சூரியனின் ஒளிரும் தன்மை அதிகரிப்பதுடன் சூரியனில் இருந்து அதிகமான தீச்சுவாலைகள் தோன்றும் என மாயன் குறிப்பிடுகின்றது. அந்தவேளையில் புவியின் காந்தப்புலங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என இன்று மாயன் நாட்காட்டியினை மேற்கோள் காட்டும் சிலர் குறிப்பிடுகின்றனர். மாயன் கணிப்பின்படி இறுதியாக நான்காவதாக வாழ்ந்த மனித சமூகம் கி.மு. 3113 வருடங்களுக்கு முன்பு பாரிய வெள்ளப்பெருக்கினால் மிகவும் அரிதானவை தவிர ஏனையவை அழிந்திருக்கின்றன.

அதனால் தமது சமூகத்தின் அடுத்த அழிவு தொடர்பாக அறிந்து கொண்டால் அதிலிருந்து தமது சமூகத்தை பாதுகாக்க முடியும் என “மாயன் சமூகம்” இது தொடர்பான விடயங்களில் அதிக ஆர்வம் கொண்டதாக இருந்திருகின்றது. எமது சூரியத் தொகுதியின் அசைவு பற்றி மாயன் சமூகத்தினர் அன்றைய காலத்திலேயே அறிந்து வைத்திருந்தனர். மேலும் அவர்கள் எமது பூமி சூரியனை சுற்றுவது போன்று எமது ஞாயிற்றுத் தொகுதி அதன் விண்மீன் மண்டலத்தினை வலம்வருவதாக நம்பினர். இதன்போது ஏற்படுகின்ற மாற்றங்களை காட்டுகின்ற சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி ஒன்றை அமைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே இன்று இக் குழப்பத்துக்கான ஆரம்பங்கள் தோன்றியிருக்கின்றன.

நவீன மனித சமூகத்தைப் பற்றி வரலாற்றில் அதிகமாக பேசப்பட்ட ஒரு ஆண்டு என்ற வகையில் 2012 தொடர்பான இக்குழப்பங்கள் தொடர்பில் இன்று விஞ்ஞானிகளின் கருத்துகளை ஏற்பதற்கு உலகின் ஒரு பகுதி மக்கள் தயாரில்லை. பெருமளவான மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருந்த இந்த விடையம் தொடர்பில் விண்வெளி அறிஞர்கள் விழிப்படைந்திருக்கின்றனர். உண்மையில் மாயன் குறிப்பிடும் இந்த கணிப்பீடு தவறானது. எமது விண்மீன் மண்டலத்தில் 2012 இல் எந்தவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்பது தற்போதைக்கு விஞ்ஞானிகளின் உறுதியான பதிலாக இருக்கின்றது.

உண்மையில் 2012ல் ஒரு மாற்றம் ஏற்படலாம் என்பது பலர் ஏற்றுக் கொள்கின்ற ஒரு கருத்தாக இருந்தாலும், அம்மாற்றங்கள் எவ்வளவு தூரம் மனித சமூகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் எவரிடமும் தெளிவான ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கங்கள் இல்லை. எமது ஞாயிற்றுத் தொகுதியானது 2008- 2015 க்கு இடைப்பட்ட இக்காலப்பகுதியில் அதன் விண்மீன் மண்டலத்தின் நேர் கோட்டிற்கு வரலாம் என பலரும் நம்புகின்றனர். உண்மையில் மாயன் சமூகத்தின் சுழற்சி நிழ்வுகளின் நாட்காட்டி 2012 டிசம்பர் 21 அன்று முடிவடைகின்றது. இது அந்த சமூகத்தின் புதிய யுகத்திற்கான வரவேற்பாகவும் ஒரு பாரிய வைபவமாகவும் இருக்கலாம் என்கின்றனர் பல ஆய்வாளர்கள். ஆனால் மாயன் குறிப்பிடும் இந்த யுகத்தின் முடிவும் 2012இன் பின்னரான புதிய யுகத்தின் ஆரம்பத்துக்கும் இடையில் எத்தகைய மாற்றங்களை புவி சந்திக்கவுள்ளது என்பது அனைவரும் காத்திருந்து பார்க்க வேண்டிய விடையமாகும்.

இந்திய நாளிதலில் வெளியான செய்தி ஒன்று அதன் முக்கியத்துவம் கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012ல் பூமியை அடையும் அபாயம்: அறிவியலாளர்கள் எச்சரிக்கை.

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. வெரசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8ம் நாளான்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப உபரகணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். “நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்” என நாசாவின் “ஈலியோ” இயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் பிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார். சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும். இருந்தாலும் “பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்” (Coranal mass ejection, CMES) மனித இனத்தைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இது 2012ம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற் படுகின்றன.

பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும். அதிதொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச் சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார் கள்.

புவி, ஞாயிற்றுத் தொகுதி அதன் விண்மீன் மண்டலம் தொடர்பான செயற்பாடுகள் சார்ந்து ஒரு தாக்கம் இடம்பெறுமானால், நிச்சயமாக அது சில வினாடிகளுக்கு மட்டுமோ அல்லது சில நிமிடங்களுக்கோ நடைபெறுவதல்ல. எத்தகைய மாற்றங்களாயினும் அவை குறிப்பிட்ட காலங்களுக்கு முன்னிருந்தே சிறிது சிறிதாக தென்பட ஆரம்பித்து, பின்னர் குறித்த காலத்தில் இருந்து சிறிது சிறிதாகவே முடிவடைய வேண்டும். எனவே இவ்விடையத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக நாம் உய்த்தறிவதற்கு தற்போதைய நடைமுறை உலகம் சிறந்த புத்தகம்.

On this day in June 22, 1941: Germany launches Operation Barbarossa—the invasion of Russia

On this day in 1941, over 3 million German troops invade Russia in three parallel offensives, in what is the most powerful invasion force in history. Nineteen panzer divisions, 3,000 tanks, 2,500 aircraft, and 7,000 artillery pieces pour across a thousand-mile front as Hitler goes to war on a second front.

Despite the fact that Germany and Russia had signed a “pact” in 1939, each guaranteeing the other a specific region of influence without interference from the other, suspicion remained high. When the Soviet Union invaded Rumania in 1940, Hitler saw a threat to his Balkan oil supply. He immediately responded by moving two armored and 10 infantry divisions into Poland, posing a counterthreat to Russia. But what began as a defensive move turned into a plan for a German first-strike. Despite warnings from his advisers that Germany could not fight the war on two fronts (as Germany’s experience in World War I proved), Hitler became convinced that England was holding out against German assaults, refusing to surrender, because it had struck a secret deal with Russia. Fearing he would be “strangled” from the East and the West, he created, in December 1940, “Directive No. 21: Case Barbarossa”–the plan to invade and occupy the very nation he had actually asked to join the Axis only a month before!

On June 22, 1941, having postponed the invasion of Russia after Italy’s attack on Greece forced Hitler to bail out his struggling ally in order to keep the Allies from gaining a foothold in the Balkans, three German army groups struck Russia hard by surprise. The Russian army was larger than German intelligence had anticipated, but they were demobilized. Stalin had shrugged off warnings from his own advisers, even Winston Churchill himself, that a German attack was imminent. (Although Hitler had telegraphed his territorial designs on Russia as early as 1925–in his autobiography, Mein Kampf.) By the end of the first day of the invasion, the German air force had destroyed more than 1,000 Soviet aircraft. And despite the toughness of the Russian troops, and the number of tanks and other armaments at their disposal, the Red Army was disorganized, enabling the Germans to penetrate up to 300 miles into Russian territory within the next few days.

Exactly 129 years and one day before Operation Barbarossa, another “dictator” foreign to the country he controlled, invaded Russia–making it all the way to the capital. But despite this early success, Napoleon would be escorted back to France–by Russian troops.